Sunday, April 23, 2017

அறிமுகம் : பஞ்சவன் மாதேவியார்

கவிதை:

:சதயமுடையாள்:

அவனிபுரத்து
 சுந்தரியாம்!
ஆடல்கலையின் 
நாயகியாம்
அருன்மொழியின் 
காதலியாம்!
மாதர் குலத்தின்
மாணிக்கமாம்!
பவஞ்சவன் மாதேவி!

மசக்கை 
கொள்ளவில்லை!
மாங்காய் 
கடிக்கவில்லை!
ஜணன,மரண
 ரணமுமில்லை!
பேறுகொண்டாள்
 மகவெனவே!
மாவீரனவனை!

தாய்பாலும்
 கொடுத்ததில்லை!
தாலாட்டும்
அறிந்த்தில்லை!
வீறுகொண்டாள்
வளர்த்திடவே!
ராஜேந்திரன்
தானவனை....

பட்டம் 
சூடவில்லை!
பாரும் 
ஆண்டதில்லை!
சட்டங்களும்
போடவல்லை!
தர்பாரும்
 நடத்தவில்லை!

சதயத்தைத்
 தான்கொண்டு,
சதயத்தில் 
தானுறைந்து
அருன்மொழியின் 
நிழலெனவே

அன்பென்ற
 மூன்றெழுத்தில்
சோழனென்ற
மூவெழுத்தில்
 சிறந்து நின்ற
ஈரறணை
ஆண்டு வந்தாள்!
அன்பினிலே!
பழுவூரின் 
பண்பினிளே!
பஞ்சவன் மாதேவி
 யெனும் தாயவளே!

                           *கவின்மொழிவர்மன்...*




பஞ்சவன்மாதேவியார் :

அவனி சுந்தர்புரத்து பழுவூர் தேவரின் திருமகள் பஞ்சவன்மாதேவியார்.இவர் தளிச்சேரி பெண்டிர்(தேவதாசி) இனத்தை சேர்ந்தவர்.அதாவது சிறுவயதிலேயே ஆடல்வல்லானின் மேலுள்ள அன்பினால்,ஆடல்கலைகளில் சிறந்து விளங்கினார்.ஒருசமயம் தில்லையம்பதி வந்த அருண்மொழிதேவர்.
இவர்மேல் காதல்கொண்டு இவரை தன் அனுக்கியாக வரிந்துகொண்டு
திருமணம் செய்து கொண்டார்.அன்றுமுதல் ராஜராஜரின்
ஒவ்வொரு செயலிலும் பக்கப்பலமாக இருந்து வழி நடத்தியவர் பஞ்சவன்மாதேவியார்.தன் மூத்தாளின் மகனாகிலும் தன் சொந்த பிள்ளைபோல் கொண்ட அன்பினால் தனக்கு வாரிசுவரின் ராஜேந்திரன்
ஆள்வதற்க்கு இடையூறு வரும் என்றெண்ணி யாருக்கும் தெரியாமல் தன் கருப்பையை மலடாக்கி, கருப்பையையே கருவறுத்தவள் ஆயினள்.
ராஜேந்திரனின் ஓவ்வொரு வளர்ச்சியிலும் உறுதுணையாக இருந்து
அவருக்கு அனைத்து திறன்களையும் வளர்த்த பெரும்பங்கு இவரையே
சாரும். பஞ்சவன்மாதேவியார் போர்திறனும் கற்றுணர்ந்தவர். ஒவ்வொருமுறை ராஜராஜர் போருக்கு செல்லும்போதும் தானும் உடன்செல்வார்.ராஜராஜர் தஞ்சை பிரகதீஷ்வரர் கோவில் அமைத்த காலத்தில் அவருடன் இருந்து அனைத்து வித்த்திலும் உதவியவர்.இவருடைய
நடனக்கலையின் பாவங்களை இன்றும் நாம் பெரியகோவிலில்
காணமுடியும்.அத்தகைய சிறப்பு பெற்ற அன்னைக்கு ராஜேந்திர சோழன் பழையாறை அருகே பட்டீஸ் வரம் என்னும் ஊரில் இவருக்கு கோவில் எடுத்து சிறப்பு செய்துள்ளார்.இதை தனது ஏழாம் ஆட்சியாண்டு கல்வெட்டிலும்
உறுதிசெய்து தனது சிற்றன்னையை பெருமைபடுததியுள்ளார்.இவ்வாறு இருபெரும் பேரரசர்களை அன்பால் ஆண்ட  பஞ்சவன்மாதேவியின் பள்ளிப்படை கோவிலுக்கு தீபமேற்றும் விழா சோழர்
வரலாற்று ஆய்வுமன்றம் சார்பாக கடந்த சித்திரை 1ஆம் தேதி நடை பெற்றது.
                        

6 comments:

  1. கவின் அவர்களின் கவின்மிகு வரிகளும், தெளிவான விளக்கவுரைகளும், குழுவினரின் தீபாஞ்சலிப் படங்களும் பக்கத்தை அழகுற அணி செய்கின்றன ! அருமை !

    ReplyDelete
    Replies
    1. கவின்மொழிவர்மன்April 30, 2017 at 8:18 PM

      நன்றி ஐயா

      Delete
  2. முழுவதும் பாலகுமாரன் எழுதிய உடையார் நாவலில் உள்ளது

    ReplyDelete
    Replies
    1. கவின்மொழிவர்மன்April 30, 2017 at 8:20 PM

      நன்றி நண்பரே

      Delete
  3. அடடடடடா!!! அருமையோ அருமை :) வாழ்க வளமுடன்!!

    ReplyDelete
    Replies
    1. கவின்மொழிவர்மன்April 30, 2017 at 8:21 PM

      நன்றி தோழமையே!

      Delete