பயணப்பதிவுகள்

12.05.2017

மாரிராஜன் பதிவு 2 :
தாராசுரம் 



நாங்கள் தேர்வு செய்த அந்த விடுதியில் இருந்து எங்கள் வரலாற்றுப் பயணம் துவங்கியது.இரண்டு வாகனங்களில் நாங்கள் சென்ற முதல் இடம்சோழ அதியுச்ச கலைப் படைப்பான தாராசுரம்.!

எங்கள் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தார்,ஆய்வாளரும் ஆசானுமான ஐயா செல்வராஜ் அவர்கள்.ஐயா அவர்களின் வழி காட்டுதலில் எங்கள் அவதானம் தொடங்கியது.
முழுவதும் சோழர் படைப்பே தாராசுரம்.!! இராண்டாம் இராஜராஜன் அதை நிர்மாணித்த விதம் குறித்து ஐயா அவர்கள் தெளிவாக எடுத்து கூறினார்.பல வியத்தகு விபரங்களைக் கற்றோம்.!!

ஆறு கோடி மக்கள் எதன் பின்னாலோ அலைந்து கொண்டிருந்த அந்த நேரத்தில் நாங்கள் எங்கள் வேர்களைத் தேடத் தொடங்கினோம்.சிற்பிகளின் கனவு என்று அழைக்கப்படும் தாராசுரத்தை.,

அந்த கலைப்பொக்கிசத்தை., காவிய உலகை பக்கம் பக்கமாக சுற்றத்தொடங்கினோம்.!

கால் அங்குல சிற்பம் முதல் பத்து அடி சிற்பம் வரை கண்டுவியந்தோம். ஒவ்வொன்றும் ஒரு கதை சொல்லியது. சிறிது சிறிதாக நாங்கள் எங்களை மறந்தோம்.! எங்கள் நினைவுகள் சோழர் காலத்திற்கு சென்றன.இதுவரை புகைப்படங்களில் பார்த்து பிரம்மித்த தாராசுர சிற்பங்களை நேரில் கண்டோம்.!!

எப்படி சாத்தியம் இது.? எதைகொண்டு செதுக்கினார்கள்.? குத்தூசியால் குடைந்தார்களா.? ஒவ்வொருவருக்கும் ஒரு அனுமானம்.! வியப்பு.! பிரம்மிப்பு.!!

ஒரு பெண்சிற்பத்திற்கு எட்டுகால்கள் பொருந்திய அதிசியம்.!!

காளையா.? யானையா.? சிற்பம்.!

முருகன்., வள்ளி., தெய்வானை சிற்பம்.! வள்ளி மூக்குத்தி அணிய வசதியாக மூக்கினுள் துளை.இன்னும் பல சிற்பங்கள்.! அந்த அலங்கரிக்கப்பட்ட தூண்.கடுகளவு பிள்ளையார்.யாரும் மறக்க இயலாது.சந்திரகாந்த கல்லால் ஆன ஐராவதேஸ்வரரைக் கண்குளிர தரிசித்தோம்.!!

சோழன் என்ற பெருமையும்., தமிழன் என்ற கர்வமும் ஏற்பட்டது.ஆனால் ஒன்று மட்டும்! நாங்கள் பார்த்தது நூறில் ஒரு பங்கு மட்டுமே.தாராசுர சிற்பங்களை முழுதும் பார்த்து அனுபவிக்க ஒரு பிறவி போதாது என்றார் இறையருள் பெற்ற ஓவியர் சில்பி.!

அதுதான் உண்மை.!

இனி சோழசிற்பிகள் படைத்த அதிசயம்., நம் புகைப்பட சிற்பிகள் சங்கீரணி மற்றும் கரிகாலன்அவர்களின் பார்வை இது.!!




ஒரு பிரம்மாண்டத்தின் முன் நாங்கள் ஒரு சிறு புள்ளியாய்.!

தாராசுரம் கோவிலில் நுழையும் சோழவரலாறு குழு.!





ஐயா செல்வராஜ் அவர்களுடன் பரபரப்பான விவாதம்.




பல விடயங்கள் கற்றறிந்தோம்.!!




யார் பெரியவர்.!! படைத்த சிற்பியா? பதிவு செய்த சங்கீரணியா?




அனைவரும் காணவிரும்பும் "ரிஷப குஞ்சரம்"



கதை சொல்லும் சிற்பங்கள்.!! கல்லில் செதுக்கப்பட்ட தூண்தான்.!!


'ஜூம்' செய்து பாருங்கள்!! ஒவ்வொரு அங்குலத்திலும் ஒரு சிற்பம்.!




இந்த அதிசிய சிற்பத்தை நன்கு அவதானித்து, என்ன இது என்று தெரிந்து கொள்ளுங்கள்.!!



என்ன ஒரு நேர்த்தி.! மிகத்துல்லியம்.!



நேரமின்மையால் தாரசுரத்திலிருந்து, ஒரு தாயின் நினைவிடம் நோக்கி எங்கள் பயணம் தொடர்ந்தது.!






-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

27.04.2017
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
 மாரிராஜன் பதிவு 1 - முன்னுரை


சோழப் பயணம்


பிறவிப் பெரும்பயனை அடைந்தவனின் பெருமிதப் பகிர்வு இது.!! ஒரு கனவு நிறைவேறிய கதை இது.!! நான் பல வரலாற்று குழுக்களில் பயணம் செய்தவன்.! எனது முதல் கோரிக்கை.! தஞ்சை பெரியகோவிலின் கருவரை தரிசனம்.!! முதல் தளம் சென்று அந்த உள்ளீடற்ற கோபுர அடுக்கை காண வேண்டும்.!! அது இயலாத காரியம். 'சாத்தியமில்லாத ஒன்று., மத்தியஅரசின் கட்டுபாடு.! தொல்லியல் துறையின் அனுமதி கிடைக்காது.!' - இவ்வாறான பதில்களே என்னை வந்தடையும்.!! வழக்கம் போல் என் விருப்பத்தை இந்த குழுவிலும் முன் வைத்தேன்.! வழக்கத்திற்கு மாறாக இது சாத்தியமே என்று நண்பர் சுரேஷ் முன் வந்தார்.!! அதைத் தொடர்ந்து பல அற்புத நிகழ்வுகள் நடந்தேறின.! பாக்கியம் பெற்றவர்கள் பயணப் பட்டியலில் இடம் பிடித்ததனர்.! நிகழ்வின் உச்சமாக அந்த, கருவரையின் மேல் கோபுரஅடுக்கை கண்டோம்.! மெய் சிலிர்த்தோம். கண்ணீர் விட்டோம்.!! எங்கள் பயணத்தில் என்ன நடந்தது.! ஒவ்வொன்றாய்., நான் உணர்ந்த வரையில் பதிவிடுகிறேன்.!! இது பயணம் மேற்கொள்ளா நண்பர்களை ., அடுத்து ஒரு பயணம் மேற்கொள்ள வைக்கும் முன்னோட்டமாக இருக்கும்.!! எங்கள் பயணத்தின் ஒட்டுமொத்த விளைவு.,  எங்கள் பயண விபரங்கள் விரைவில்.!! இன்னும் என் மேனி சிலிர்த்துக்கொண்டே இருக்கிறது.!!


(தொடரும்)


எழுத்து : மாரிராஜன் 

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------




4 comments:

  1. அந்த நாள் ஞாபகம்,சொல்லியிருக்கும் விதம் மிக அற்புதம்.

    ReplyDelete
  2. பயண நினைவுகளும் ஒரு நிகழ் கால வரலாறாகப் பதிவாகும் மாரி ஐயா கை வண்ணத்தால்......அழகுதான்...

    ReplyDelete
  3. பயணத்தின் போது கண்ட காட்சிகளை மறுபடியும் கண் முன் கொண்டு வந்தீர்கள் ஐயா.இந்த பயணத்தில் நான் பங்குபெற்றது பெரும் பாக்கியம்.நன்றி ஐயா.

    ReplyDelete