கவிதைகள்


---------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------

பரதன் கதை கேட்டமையால்
பாரதம்ஆள வேறாள் வேண்டா
வேண்டிப்பெற்ற வேந்தர் கோன்
சோழமகவே எந்தன் மகனாய்
போதும் என்ற பொன்மனச்செல்வி...!
சித்தி கொடுமை என்னும்
புத்தி சுருக்கியவர் மத்தியில்
சித்தியென்பதனை
கொடைமையாய் கொடுத்தவர்...!
பழுதில்லா மனம் உடைய
உடையார் உடையாள்...!
பழுவூர் அன்னை...!
பஞ்சவன் மாதேவிச்சரம்
ஆளும் தேவி...!
உலகாளும் உன்னதர்கள்!
சோழர்தம் மகோன்னதர்கள்!!
தந்தையும் மகனும் உலகாள
அவர்
இருவர்தம் மனதாண்ட மாதரசி...!
தாய்மை இல்லாமலேயே
அதன்
எல்லை கண்ட -நக்கன்
தில்லை அழகி...!
கலமறுத்தருளியவரின் அணுக்கியாய்
தன்
கருமறுத்தருளிய தாயாய்...!
விளக்கொளியில் ஒளிர்வது
அவர்தம் கருவறை...
ஆம்! அவரது
தாய்மையின் சிறப்பறை...!
வணங்கி வணங்கி
மகிழ்கிறோம்...
ராஜேந்திரன்
வழிவழி வந்தோர்போல்...
பெண்மை காட்டும் உண்மை
அவள்தம் தாய்மை...
அன்னையே!
சோழம் தழைக்க
தன்
தாய்மையைக் கொடுத்த
உலகத் தாய்மையின்
தாய்மையே...!
சோழ உணர்வுடன்
உம்மை
தொழுது பணிகின்றோம்...
வாழிய..!
வாழியவே..!!


--அகரம் பார்த்திபன்
--------------------------------------------

6 comments:

  1. அருமை! அருமை! கருத்துக்கியைந்த வரிகள்! வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  2. கவிதைக்கொரு தலைப்பு கொடுத்தல் நலம்!

    ReplyDelete
  3. அருமையான கவிதை

    ReplyDelete
  4. ஆம் தலைப்பு கொடுத்தால் நாங்களும் முயற்சி செய்யவோம்

    ReplyDelete
    Replies
    1. மிகவும் சரி. எனில் நான் சொல்ல விழைந்தது 'இந்தக் கவிதைக்கு ஒரு தலைப்பு தர வேண்டும்' என்று!

      Delete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete